தம்முடு: திரை விமர்சனம்

தம்முடு: திரை விமர்சனம்

நிதின், வர்ஷா பொல்லம்மா, ஸ்வாசிகா நடிப்பில் வெளியாகியுள்ள “தம்முடு” தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காண்போம்.

தம்முடு: திரை விமர்சனம் | Thammudu Movie Review

கதைக்களம்

விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலை வெடித்து விபத்திற்குள்ளானதில் நச்சு வாயு வெளிப்படுகிறது.

இதில் ஊர் மக்கள் பலர் உயிரிழக்க, தங்களது உறவுகளை பறிகொடுத்தவர்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள்.

ஆனால், தொழிற்சாலை ஓனரான சௌரப் சச்தேவா சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மிரட்டி கையெழுத்து வாங்குகிறார்.

எனினும் தலைமை அதிகாரியான லயாவிடம் கையெழுத்து வாங்க, அவர் இருக்கும் மலை கிராமத்திற்கு ஒரு கூட்டத்தை அனுப்புகிறார்.

தம்முடு: திரை விமர்சனம் | Thammudu Movie Review

பல ஆண்டுகள் கழித்து தன் அக்கா லயாவை சந்திக்கும் நிதின், தன்னை யார் என்று காட்டிக்கோள்ளாமல் அக்கா மற்றும் அவரது கணவர் குடும்பத்தை காப்பாற்ற போராடுகிறார்.

அதன் பின்னர் சௌரப்பின் எண்ணம் நிறைவேறியதா? நிதின் அக்கா குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்


வழக்கமான அக்கா, தம்பி செண்டிமெண்ட் கதைதான். ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் வேணு.

ஆனால் திரைக்கதைதான் படாய்படுத்திவிட்டது. மருந்துக்கு கூட செண்டிமெண்ட் ஒர்கவுட் ஆகவில்லை.

நிதின் தனது அக்காவை பிரிந்து இருப்பதற்கான காரணத்தில் வழுவில்லை.

அதேபோல் படத்தின் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிகின்றன.

காட்டுக்குள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் ஒரு குடும்பம்; அவர்களை தனியாளாக போராடி பெருங்கூட்டத்திடம் இருந்து காப்பாற்றும் ஹீரோ என்பது நல்ல ஆக்ஷன் கதைக்களம்தான் என்றாலும், திரைக்கதையில் சொதப்பி சோதித்திருக்கிறார்கள்.

தம்முடு: திரை விமர்சனம் | Thammudu Movie Review

வில்லன் சௌரப்பை மாஸாக காட்டுவதாக நினைத்து கிரிஞ்ச் செய்திருக்கிறார்கள். வர்ஷா நிதினை கம்பானியன் என்கிறார். ஆனால் கடைசிவரை அவர்களுக்குள் என்ன உறவு என்பதை கூறவில்லை.

சப்தமி கௌடா நேரிலேயே பார்க்காத நிதினுக்கு அவ்வளவு உதவிகள் ஏன் செய்கிறார் என்பதையும் கூறவில்லை.

நிதின் கூட அக்காவை பார்த்து பாசத்தில் உருகுவது போல் காட்சிகள் உள்ளன; தம்பி மேல் கோபமே இல்லாத அக்கா அவனை நினைத்து ஃபீல் பண்ணுவதுபோல் ஒரு காட்சி கூட இல்லை.

இரண்டாம் பாதியில் பாடல்கள் இல்லாதது சற்று ஆறுதல். வர்ஷா, ஸ்வாசிகா சண்டையிடும் காட்சி அருமை.

ஓ மை பிரண்ட், மிடில் கிளாஸ் அப்பாயி, வக்கீல் சாப் என ஹிட் படங்களை கொடுத்த ஸ்ரீராம் வேணு இம்முறை ரொம்பவே சொதப்பிவிட்டார்.

க்ளாப்ஸ்

சண்டைக்காட்சிகள்


பின்னணி இசை


பல்ப்ஸ்

திரைக்கதை


லாஜிக் மிஸ்டேக்ஸ்


படத்தின் நீளம்


மொத்தத்தில் இந்த தம்முடு (தம்பி) நம்மை ரொம்பவே சோதித்துவிட்டார்.

தம்முடு: திரை விமர்சனம் | Thammudu Movie Review

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *