தமிழகத்தில் எத்தனை திரையரங்குகளில் விடாமுயற்சி ரிலீசாகிறது தெரியுமா! பிரபலம் கூறிய தகவல்

விடாமுயற்சி
இயக்குநர் மகிழ் திருமேனி – நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை வருகிற 6ம் தேதி திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் ப்ரீ புக்கிங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் கண்டிப்பாக மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகள்
உலகளவில் ரிலீஸ் ஆகும் விடாமுயற்சி தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்து தகவல் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமே விடாமுயற்சி திரைப்படம் 1000 ஸ்க்ரீன்களில் வெளிவருகிறது என தமிழக திரையரங்க சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.