தமிழகத்திலும் பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து? அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்திலும் பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து? அன்பில் மகேஷ் விளக்கம்!

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆல் பாஸ்  ரத்து?

கட்டாய தேர்ச்சி
மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தி இருந்தது. இதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் அனைவரையும் கட்டாயம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலும் பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து? அன்பில் மகேஷ் விளக்கம்! | Anbil Mahesh About All Pass For 5Th 8Th Students



5 மற்றும் 8 ஆம் வகுப்பு
இந்நிலையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி கொள்கையை ரத்து செய்வதாக மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து,

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும், அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகள் அதே வகுப்பில் ஓராண்டு பயில வேண்டும் என்ற முறையையும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை

அன்பில் மகேஷ்

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில்கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து,

தமிழகத்திலும் பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து? அன்பில் மகேஷ் விளக்கம்! | Anbil Mahesh About All Pass For 5Th 8Th Students

ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில்

செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனவே தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச்

சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *