தன்னை பற்றி பரவிய வதந்தி.. சாய் பல்லவி உச்சகட்ட கோபமாக கொடுத்த பதிலடி

தன்னை பற்றி பரவிய வதந்தி.. சாய் பல்லவி உச்சகட்ட கோபமாக கொடுத்த பதிலடி


நடிகை சாய் பல்லவி தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் அதில் ராமர் ரோலில் நடிக்கிறார். அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் கூட சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

சாய் பல்லவி சீதை ரோலில் நடிக்க சில விஷயங்களை செய்து வருகிறார் என ஒரு செய்தி சமீபத்தில் பரவி வருகிறது. சீதையாக நடிக்க அவர் சைவமாக மாறி இருக்கிறார் என்றும், அதற்காக வெளியில் ஹோட்டலில் கூட அவர் சாப்பிடுவதில்லை என ஒரு செய்தி ஒரு முன்னணி மீடியாவில் வெளியாகி இருக்கிறது.


அது பற்றி கோபமாக சாய் பல்லவி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

தன்னை பற்றி பரவிய வதந்தி.. சாய் பல்லவி உச்சகட்ட கோபமாக கொடுத்த பதிலடி | Sai Pallavi Angry On Rumour About Her

கோபமான பதிலடி

“என்னை பற்றி இப்படி பொய்யான தகவல்கள் வரும்போது நான் பலமுறை, கிட்டத்தட்ட எல்லா முறையும், அமைதியாக தான் இருந்திருக்கிறேன். இதை அவர்கள் உள்நோக்கத்துடன் செய்கிறார்களா என்பது கடவுளுக்கு தான் தெரியும்.”

“இது தொடர்கதையாகிவிட்ட விட்டது, நிற்பது போல தெரியவில்லை என்பதால் நான் இதற்கு பதில் அளிக்க இது தான் நேரம்.”

“என் படங்கள் ரிலீஸ், அறிவிப்புகள் வரும்போது, என் கெரியரில் முக்கிய நேரங்களில் இப்படிப்பட்ட வதந்திகள் வருகிறது.”

“இது போல பொய்யான செய்திகள், கிசுகிசுக்கள் இனிமேல் வந்தால் நான் சட்டப்படி தான் சந்திப்பேன்” 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *