தடயம் வெப் சீரிஸ் எப்படியிருக்கு? விமர்சனம்

தடயம் வெப் சீரிஸ் எப்படியிருக்கு? விமர்சனம்

நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் சமுத்திரகனி, ஷிவதா நடிப்பில் வெளிவந்துள்ள தடயம் திரில்லர் கிரைம் வெப் சீரிஸ் எப்படி? பார்ப்போம்.

கதைக்களம்

சமுத்திரக்கனி SI ஆக இருந்தாலும் வேலையின் மீது எந்த ஒரு நாட்டமும் இல்லாமல் அடுத்த மாதம் வேலையை ரிசைன் செய்துவிட்டு செல்லலாம் என்ற மனநிலையில் இருக்கிறார், அந்த நேரத்தில் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஆக ஷிவதா பொறுப்பேற்கிறார்.

அப்போது ஆந்திதா-தமிழகம் எல்லையில் இருக்கும் இவர்கள் ஸ்டேஷன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொலை நடந்து வருகிறது, கொலை செய்பவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்களை கொல்வதோடு தாலி, அர்னாகுடி மட்டும் எடுத்து செல்கின்றனர்.

வேறு பணம், நகை எதையும் எடுக்காமல் இருப்பது இவர்கள் சைக்கோ என்ற மனநிலைக்கு போலிஸார் வருகின்றனர். ஷிவதாவிற்கு இந்த கேஸ் வருகிறது.

ஆரம்பத்தில் சமுத்திரகனியை ஷிவதா திட்டினாலும், அவரின் கண்ணோட்டத்தையும், ஏன் இப்படி இருக்கிறார் என்பதையும் தெரிந்துக்கொண்டு இந்த கேஸை சமுத்திரகனி உதவியுடன் ஷிவதா எப்படி கண்டுப்பிடித்தார் என்பதே மீதிக்கதை.
 

சீரிஸ் பற்றிய அலசல்

மொத்தம் 6 எபிசோடுகளாக வெளிவந்துள்ள இந்த சீரிஸை ஒரு படமாகவே எடுத்திருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு எபிசோடும் 20 நிமிடம் தான். ஜீ 5 தளத்தில் இந்த சீரிஸை பார்க்கலாம்.

சமுத்திரகனி நமக்கே இவர் என்ன இவ்ளோ மோசமாக இருக்கிறார் என ஆரம்பத்தில் தோன்றினாலும், காவல்துறையில் ஒருவரின் உழைப்பை எப்படி மற்றவர் தன் வளர்ச்சிக்கு அறுவடை செய்கிறார் என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளனர்.

அதோடு சமுத்திரகனி சின்ன சின்ன எவிடன்ஸ் வைத்து அவர்கள் இரண்டு பெயர்கள், அவர்கள் தெலுங்கு பேசுபவர்கள் என அவர் கண்டுப்பிடித்து செல்லும் இடமெல்லாம் சுவார்ஸ்யம்.

அதோடு ஆந்திராவில் தெலுங்கு போலிஸார் Vs தமிழ் போலிஸார் போன்ற காட்சிகள் எல்லாம் உண்மை கதை என்பதால் அப்படியே தத்ரூபமாக காட்டுகின்றனர்.

ஷிவதாவும் தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரம் 2 பேர் வருவது மிரட்டல், அவர்களுக்கு நடந்த கொடுமை, அதனால் இப்படி ஆனார்கள் என்பது உண்மை சம்பவம் என்று சொல்வது பதபதக்கிறது.

அதே நேரத்தில் வில்லன் இவர்கள் தான் என தெரிந்த பின்பு கதை மீண்டும், மீண்டும் ஒரே இடத்தில் சுற்றுவது கொஞ்சம் சோர்வை ஏற்படுத்துகிறது.

க்ளபாஸ்

சமுத்திரகனி, ஷிவதா நடிப்பு

ரன்னிங் டைம்.


பல்ப்ஸ்

இந்த மாதிரி கதைகளம் உண்மை என்றாலும் அதை படமாகவும். சீரிஸாகவும் எடுக்கும் போது கிளைமேக்ஸ் வரைக்கும் பரபரப்பு இருக்க வேண்டும், அது கொஞ்சம் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் தடயம் எட்ஜ் ஆப் தி சீட் இல்லை என்றாலும், காவல்துறை யதார்த்த உலகத்தை காட்டியதற்காகவே கண்டிப்பாக பார்க்கலாம். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *