ஜோதிகா செய்ததை நான் செய்யவில்லை.. நடிகை விந்தியா சொன்ன அந்த விஷயம்

ஜோதிகா செய்ததை நான் செய்யவில்லை.. நடிகை விந்தியா சொன்ன அந்த விஷயம்

ஜோதிகா

பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரக்னா என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் வாலி படத்தின் மூலம் 2வது நாயகியாக அறிமுகமானவர்.

ஜோதிகா செய்ததை நான் செய்யவில்லை.. நடிகை விந்தியா சொன்ன அந்த விஷயம் | Actress About Her Movie

அடுத்து சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நாயகியானார். பின் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அந்த விஷயம் 

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை விந்தியா அவரது திரை வாழ்க்கை மற்றும் ஜோதிகா குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” சங்கமம் படத்திற்கு முன் நான் முதலில் கமிட்டானது ரிதம் படத்திற்கு தான். ஆனால், இயக்குநர் வசந்த் சங்கமம் படத்தில் நான் நடித்தால், ரிதம் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறினார்.

ஜோதிகா செய்ததை நான் செய்யவில்லை.. நடிகை விந்தியா சொன்ன அந்த விஷயம் | Actress About Her Movie

அதன் காரணமாக ரிதம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டு, சங்கமம் படத்தில் நடித்தேன். இதன் பின் தான் ஜோதிகாவுக்கு ரிதம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடித்த முதல் படமே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அப்போது ஜெயலலிதா அம்மா தான் என்னை அழைத்துபேசி நம்பிக்கை கொடுத்தார்” என்று கூறியுள்ளார்.    

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *