ஜோதிகாவின் ரொமான்டிக் Vacation.. அழகிய ஜோடியின் வீடியோ இதோ

சூர்யா – ஜோதிகா
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக சூர்யா – ஜோதிகா காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு சூர்யா தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நிலையில், 6 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.
மேலும் தற்போது சோலோ ஹீரோயினாகவும், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு தியா எங்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்தான் மகள் தியாவின் பள்ளி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.
Vacation
இந்த நிலையில், சூர்யா – ஜோதிகா இருவரும் ஆப்பிரிக்காவில் உள்ள seychelles என்கிற நாட்டிற்கு தங்களது விடுமுறையை கொண்டாட Vacation சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் மகிழ்ச்சியாக ஜோடியாக சுற்றி திரியும் வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..