ஜி.வி.பிரகாஷிற்கு கிடைத்த தேசிய விருது, வாழ்த்து கூறிய அவரது முன்னாள் மனைவி சைந்தவி… பதிவு இதோ

தேசிய விருது
ஒரு கலைஞனுக்கு விருது என்பது எப்போதுமே ஸ்பெஷல் தான்.
உற்சாகமாக உழைக்க விருதுகள் ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது, அப்படி சமீபத்தில் பல கலைஞர்கள் கொண்டாடும் விதமாக 2023ம் ஆண்டிற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
தமிழில் பார்க்கிங் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகராக எம்.எஸ் பாஸ்கருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷுக்கு விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாத்தி படத்திற்காக அவர் விருது வாங்குகிறார்.
33 வருட சினிமா பயணத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஜவான் படத்திற்காக வாங்குகிறார்.
சைந்தவி
2வது முறையாக தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷிற்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் அவரின் முன்னாள் மனைவி சைந்தவியும் வாழ்த்து கூறி ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், இரண்டாவது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
மதிப்புமிக்க நடுவர் குழு மற்றும் தேர்வுக் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த அழகான பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்காக வாத்தி பட முழு குழுவிற்கும் நன்றி.
இந்தப் படத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்த என் சகோதரர் தனுஷுக்கு சிறப்பு நன்றி.
இந்தப் படத்திற்கான இசையை எனக்கு வழங்கவும், என்னை நம்பவும் என்னைத் தூண்டிய எனது இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு ஒரு பெரிய நன்றி என்று பதிவிட்டுள்ளார்.