ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்..

ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்..

எதிர்நீச்சல் 

எதிர்நீச்சல் சீரியலில் தற்போதைய கதைப்படி, விசாலாட்சியை கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறான் கதிர். விசாலாட்சி நான் எதற்காக கையெழுத்து போட வேண்டும், என்னால் முடியாது என்று சொல்ல, நீ கையெழுத்து போடவில்லை என்றால், இந்த வீட்டில் பத்து உயிர் போகும் என மிரட்ட வேறு வழியே இல்லாமல் விசாலாட்சி கையெழுத்து போடுகிறார்.

ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. | Gunasekaran Shocked After Knows Janani Is Alive

டாக்டர் தேவசகாயம் வீட்டில் எதோ ஒரு மர்மம் இருப்பதை உணரும் ஜனனி, அது என்ன என்பதை தெரிந்துகொள்ள வீட்டின் பின்பக்கம் செல்கிறார். அங்கு கதவு பூட்டப்பட்டு இருக்க, ஜன்னலை திறந்து பார்க்க அங்கு ஒரு பெண்ணின் கால் மட்டும் தெரிகிறது. அதைப்பார்த்து பயந்துபோகும் ஜனனி, யார் நீங்க என கேட்கிறார். இந்த சமயத்தில் தேவசகாயம் ஜனனியை பார்த்துவிட, அந்த இடத்திலேயே வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து, ஜனனியை இழுத்து வந்து ஒரு அறையில் தள்ளுகிறார்.

ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. | Gunasekaran Shocked After Knows Janani Is Alive

அதிர்ச்சியில் குணசேகரன்

ஜனனிக்கு இப்படியொரு கொடுமை நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஆதி குணசேகரனின் போன் நம்பரை தேவசகாயம் வாங்கி, ஜனனி என்னிடம்தான் இருக்கிறார் என கூற, அதிர்ச்சியில் உறைந்துபோகிறார் குணசேகரன். பின் தனது தம்பிகளை அழைத்து ஜனனி இன்னும் சாகவில்லை என கூறுகிறார்.

ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. | Gunasekaran Shocked After Knows Janani Is Alive

வீட்டிற்கு வரும் சக்தி, டேய் கதிர் உங்க அண்ணனை கூட்டிக்கொண்டு கீழே வா டா என கத்துகிறார். ஜனனி மட்டும் எதாவது தவறாக நடந்தால் உங்க கூட்டத்தில் ஒருத்தர் கூட நடமாட முடியாது பாத்துக்கோங்க என குணசேகரனிடம் சவால் விடுகிறார்.

இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது, ஜனனி எப்படி தப்பிக்கப்போகிறார்? ரசிகர்களின் எதிர்பார்ப்பின்படி ராணா என்ட்ரி இப்போது இருக்குமா என பல கேள்விகளுக்கு விடையை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *