ஜனநாயகன் படத்தின் OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா

ஜனநாயகன் படத்தின் OTT உரிமை.. இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா

ஜனநாயகன்

விஜய்யின் படத்திற்கு ப்ரீ பிஸினஸ் மிகப்பெரிய அளவில் இருக்கும். குறிப்பாக கடந்த சில திரைப்படங்களின் ப்ரீ பிஸினஸ் தயாரிப்பாளருக்கு படத்தின் ரிலீஸுக்கு முன்பே லாபத்தை கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கோட் படம் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு Table profit-ஆக அமைந்தது என அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் ஆகும். இதன்பின் அவர் முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

OTT உரிமை

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் OTT உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.

ஆனால், அந்த தொகை எவ்வளவு என்பது குறித்து விவரம் வெளிவரவில்லை. இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 80 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *