ஜனநாயகன் சென்சார் போர்டு மூலம் லீக் ஆனதா? சர்ச்சைக்கு CBFC வெளியிட்ட அறிக்கை

ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், அந்த படம் சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தது.
முழு படமும் HD தரத்தில் பைரஸி இணையதளங்களில் கசிந்ததால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்தது. உடனே சட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கின்றனர். சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் படம் சென்சார் போர்டு மூலமாக கசிந்ததாக குற்றச்சாட்டு இருப்பது பற்றி தற்போது CBFC விளக்கம் கொடுத்து இருக்கிறது.
விளக்கம்
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (#CBFC) “ஜன நாயகன்” என்ற தமிழ்த் திரைப்படம் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. திரைப்படச் சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறையைத் தான் பின்பற்றுவதாக CBFC தெளிவுபடுத்தியுள்ளது.
திரைப்படத்தின் உள்ளடக்கங்கள் கடவுச்சொல் (Password) மூலம் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் அந்த KDM தயாரிப்பாளர் அல்லது இயக்குநரிடம் மட்டுமே இருக்கும். முறையான KDM இல்லாமல், திரைப்படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.
“ஜன நாயகன்” படத்தின் DCP (Digital Cinema Package), மார்ச் 17-ம் தேதி மும்பையில் உரிய அங்கீகாரத்துடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது, அதுமுதல் அது அவர்களிடமே உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
Reports claiming that the Tamil film “Jana Nayagan” was leaked from the Central Board of Film Certification (CBFC) are baseless and misleading.
CBFC has clarified that it follows a secure KDM (Key Delivery Message) system for all theatrical films submitted for certification.… pic.twitter.com/V8qwL7GotP
— PIB in Maharashtra 🇮🇳 (@PIBMumbai) April 11, 2026






