சொன்ன சொல் தவறாமல் 7 வருடமாக உதவும் சிவகார்த்திகேயன்.. யாருக்கு தெரியுமா?

நடிகர் சிவகார்திகேயன் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடிப்பில் அடுத்து மதராஸி, பராசத்தி ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.
அந்த இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
நெல் ஜெயராமன்..
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு மீண்டும் பயிரிட உதவி வந்த நெல் ஜெயராமன் 2018ல் உடல்நல குறைவால் காலமானார்.
அப்போது அவரது இறுதி சடங்கிற்கான செலவு, அவரது மகனின் படிப்பு செலவு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்திகேயன் கூறி இருந்தார்.
சொன்ன சொல் தவறாமல் சிவகார்த்திகேயன் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் கல்வி கட்டணத்தை செலுத்தி வருகிறாராம்.
இந்த தகவலை இயக்குனர் இரா.சரவணன் முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.