செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானாவா இது, உடல் மெலிந்து ஆளே மாறிவிட்டாரே… லேட்டஸ்ட் க்ளிக்

செம்பருத்தி
ஜீ தமிழில், சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இணையாக நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது செம்பருத்தி தொடர். இதில் கார்த்திக் மற்றும் ஷபானா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற இப்படம் தமிழ்நாட்டில் டிஆர்பியில் முதல் இடம் எல்லாம் வந்தது. 1433 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த தொடர் கடந்த ஜுலை 2022ம் வருடம் முடிவுக்கு வந்தது.
ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரெட் நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை ஷபானா. இந்த தொடர் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
சீரியல் முடிந்தது சன் டிவி மிஸ்டர் மனைவி தொடரில் நாயகியாக நடித்து வந்தார், ஆனால் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் ஷபானா எந்த தொடரிலும் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஷபானா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். காரணம் உடல் மெலிந்து ஆளே மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் செம்பருத்தி ஷபானாவா இது என ஷாக் ஆகியுள்ளனர்.