சூப்பர்ஹிட் இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி.. அட இந்த கூட்டணி சூப்பரா இருக்கே

கார்த்தி
நடிகர் கார்த்தி கைவசம் தற்போது வா வாத்தியார், மார்ஷல் மற்றும் சர்தார் 2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் நலன் குமாரசாமி இயக்கி வரும் வா வாத்தியார் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது நடிகரும் இயக்குநருமான தமிழ் இயக்கி வரும் மார்ஷல் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.
அடுத்த படம்
பிசியாக நடித்து வரும் நடிகர் கார்த்தியின் அடுத்த புதிய திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் இணையத்தில் உலா வருகிறது. இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த திரைப்படம் தொடரும். இப்படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் தருண் மூர்த்தியுடன் கார்த்தி கைகோர்க்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான டிஸ்கஷன் நடந்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் கூறுகின்றனர்.