சிவப்பு நிற உடையில் ரசிகர்களை கவரும் நடிகை சாயிஷா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா.
இதன்பின் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, காப்பான், டெடி ஆகிய படங்களில் நடித்தார். நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகள் உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை சாயிஷா.
தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.