சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க நடிகர் சுந்தர்ராஜன், நடிகை அணிலா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

சிறகடிக்க ஆசை
கொஞ்சம் கூட சலிப்பே தட்டாத சின்னத்திரை சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ் – விஜயா இருவரும் இணைந்து விவாகரத்து விஷயத்தில் செய்த பித்தலாட்டம் தெரிய வந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதை தொடர்ந்து, குடும்பத்திற்கு தெரியாமல் வீட்டை அடமானம் வைத்த கடன் வாங்கிய விஷயமும் தற்போது வெளிவந்துவிட்டது. தன்னுடைய கையெழுத்து போட்டு மனோஜ் வீட்டை அடமானம் வைத்த விஷயத்தை தெரிந்து அதிர்ச்சியடைந்த அண்ணாமலை, இதன்பின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
சுந்தர்ராஜன், அணிலா சம்பளம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் நடிகர் சுந்தர்ராஜன், நடிகை அணிலா ஸ்ரீகுமார். இவர்கள் இருவரும் அப்பா, அம்மாவாக அண்ணாமலை, விஜயா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க நடிகர் சுந்தர்ராஜன், நடிகை அணிலா இருவரும் ஒரு நாளைக்கு ரூ. 8,000 சம்பளமாக வாங்குவதாக தகவல் தெரிவிக்கிறது.






