சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்க நடிகை மனிஷா வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியல் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் கூட TRP-ல் 10.38 பெற்று முதலிடத்தை பிடித்திருந்தது.
தற்போதைய கதைக்களம் படி
ஆனந்தி தான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை, எவனோ ஒருவன் செய்த செயலால்தான் நான் கர்ப்பம் ஆனேன். இதை மொத்த ஊருக்கும் நிரூபித்து காட்டுவேன் என கூறி சவால் விட்டுவிட்டு மீண்டும் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார்.
ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ்தான் காரணம் என அவர் எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்பதே சிங்கப்பெண்ணே சீரியலின் அடுத்தகட்டமாக பார்க்கப்படுகிறது.
ஆனந்தி சம்பளம்
இந்த நிலையில், சிங்கப்பெண்ணே சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நடிகை மனிஷா மகேஷ், இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை மனிஷா மகேஷ், ஒரு நாளைக்கு ரூ. 12,000 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்.