சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு… சோகமான அரங்கம்

சரிகமப சீசன் 5
தமிழ் சின்னத்திரை பாடல்களை மையப்படுத்தி சூப்பர் சிங்கர், சரிகமப சீசன் 5 நிகழ்ச்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் வித்தியாசமான கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது, மக்களுக்கும் நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகம் உள்ளது.
இன்னொரு பக்கம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப, இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
சோகமான விஷயம்
ஜீ தமிழின் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் Dedication Round நடந்துள்ளது. இதில் போட்டியாளர் அருண் தனது அம்மாவிற்காக பாடல் பாடினார். அவர் பாடி முடித்த பிறகு தொகுப்பாளினி அர்ச்சனா அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி செய்தியை பகிர்ந்துகொண்டார்.
அருண் பாடிக் கொண்டிருக்கும் போதே அவருடைய பாட்டி இறந்துபோய்விட்டாராம். இந்தச் செய்தியை அருணிடம் சொல்ல வேண்டாம் என்று அவருடைய தாய் மறைத்துவிட்டாராம்.
பாடி முடித்த பிறகு அருணிடம் தொகுப்பாளினி இந்த விஷயம் கூற அனைவரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர். பின்னர் அருணின் பாட்டிக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.