சம்பளத்தை கேட்பேன், தேவையில்லாமல்.. நடிகை பிரியாமணி அதிரடி பதில்!

பிரியாமணி
பருத்திவீரன் படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
அதிரடி பதில்!
இந்நிலையில், சினிமாவில் வாங்கும் சம்பளம் குறித்து பிரியாமணி பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
அதில், ” உங்கள் சந்தை மதிப்பு எதுவாக இருந்தாலும், அதை நீங்கள் கேட்க வேண்டும். அதற்கேற்ற தொகை உங்களுக்குக் கிடைக்க வேண்டும். என் சக நடிகரை விட எனக்கு குறைந்த சம்பளம் கிடைத்த நேரங்கள் உண்டு.
ஆனாலும் அது என்னைப் பாதிக்கவில்லை. என் மதிப்பு என்னவென்று எனக்குத் தெளிவாகத் தெரியும். இதுதான் என் அனுபவம்.
எனக்குத் தகுதியானது என்று நான் நம்பும் சம்பளத்தை நான் கேட்பேன். தேவையில்லாமல் அதிகமாக சம்பளம் கேட்க மாட்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.