கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா – அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!

கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா – அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!

கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளையராஜா 

 ஸ்ரீவில்லிப்புத்தூர், ஆண்டாள் கோயில் புகழ்பெற்ற ஒரு கோயிலாகும். பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இங்கு வந்து வழிப்படுவது வழக்கம். கோயிலில் திவ்ய பாசுரம் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த கச்சேரியில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்றார்.

கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா - அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு! | Ilayaraaja Was Not Allowed Inside Temple Sanctum

அதன் பிறகு, அங்குள்ள கோயிலில் ஆண்டாளை வழிப்பாடு நடத்தினார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார்.

அனுமதி மறுப்பு

இதைக் கண்ட ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, கருவறைக்கு வெளியே சென்ற இளையராஜா, அங்கிருந்தபடியே வழிபாடு செய்தார்.

கோவில் கருவறைக்குள் நுழைந்த இளையராஜா - அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு! | Ilayaraaja Was Not Allowed Inside Temple Sanctum

வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜா கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ஸ்ரீவில்லுபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கருவறைக்குள் இளையராஜா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *