கூலி படம் இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

கூலி
வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் வெளியாவதால், ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா கோலமாக போகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
மிரட்டலாக அமைக்கப்பட்டிருந்த இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கூலி திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி நல்லபடியாக நடந்து வருகிறது.
அட்வான்ஸ் புக்கிங்
இந்த நிலையில், இதுவரை ரிலீஸுக்கு முன் அட்வான்ஸ் புக்கிங்கில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது.
இதில் வட அமெரிக்காவில் மட்டுமே ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் அட்வான்ஸ் புக்கிங் களைகட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.