கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம்

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது.
ஷங்கர் எடுத்தால் பிரம்மாண்டம், கௌதம் மேனன் எடுத்தால் காதல், வெற்றிமாறன் ஒரு விதம் என இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விஷயத்தில் படம் இயக்கி சாதனை படைக்கின்றனர்.
அப்படி தரமான இளைஞர்கள் கொண்டாடும் படமாக கொடுத்து இப்போது டாப் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
கூலி படம்
இவரது இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிப்பில் கூலி என்ற படம் வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினி, நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பாலிவுட் நடிகர் அமீர்கான் என பலர் நடித்துள்ளனர். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
அண்மையில் கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், கூலி திரைப்படம் உருவான கடந்த 2 வருடங்களாக நான் திரைப்பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
என் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, சமூக ஊடகங்களுடனோ என எதற்கும் நேரம் கொடுக்கவில்லை. எனது 36 – 37 வருட வாழ்க்கையில், கூலி படத்திற்காகப் பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.