கூட்டநெரிசல் சம்பவம்..விஜய் கட்சியை சேர்ந்த முக்கிய நபரை கைது செய்த போலீஸ்

நடிகர் விஜய்யின் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் தவெக கட்சியின் முக்கிய பதவியில் இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொது செயலாளர் ஆகியோர் இன்று இரவு கைது செய்யப்படலாம் என முன்பே தகவல் வந்தது.
கைது நடவடிக்கை
இந்நிலையில் தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஜாமீனில் வர முடியாத ஐந்து பிரிவுகளும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் கரூரில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.