குழந்தையை பெற்றெடுத்த இசக்கி.. தாய் மாமனான சண்முகம்.. அண்ணா சீரியல் ப்ரோமோ

அண்ணா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அண்ணா. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் மிர்ச்சி செந்தில், இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவருடன் இணைந்து நடிகை நித்யா ராம் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அண்ணா சீரியலில், கர்ப்பமாக இருந்த இசக்கி அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். அவரை பார்க்க குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
ஆனால், இசக்கியின் அண்ணன் சண்முகம் மட்டும் செல்லவில்லை. தான் அழைத்தும் தனது வீட்டிற்கு இசக்கி வரவில்லை என்பதால், அவர் மேல் கோபத்தில் சண்முகம் இருந்தார். இதனால் மருத்துவமனைக்கு அவர் செல்லவில்லை.
குழந்தையை கொஞ்சிய சண்முகம்
மருத்துவமனையில் இருந்த சண்முகத்தின் மனைவி பரணி, அங்கிருந்து வீடியோகால் செய்து இசக்கி மற்றும் குழந்தையை காட்டுகிறார். வீடியோகாலில் தனது தங்கைக்கு பிறந்த குழந்தையை பார்த்தவுடன் கண்ணீர்விட்ட சண்முகம் உடனடியாக புறப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அங்கு, தனது மருமகளை தூக்கி கொஞ்சி கண்ணீர்விட்டு அழுகிறார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ: