கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இனி வட்டி எகிறும் – உச்சநீதிமன்ற உத்தரவால் சிக்கல்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு இனி வட்டி எகிறும் – உச்சநீதிமன்ற உத்தரவால் சிக்கல்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



கிரெடிட் கார்டு



எதிர்பாராதவிதமாக ஏற்படும் செலவீனங்களை சமாளிக்க பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது உண்டு. குறிபிட்ட காலத்துக்குள் அந்த கடனை செலுத்தாவிட்டால் வட்டி வழங்க வேண்டி இருக்கும். 

credit card 30%


இந்த வட்டியானது 30% க்கு மேல் இருக்க கூடாது என 2008 ஆம் ஆண்டு, தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் தீர்ப்பு வழங்கியது.



உச்ச நீதிமன்ற தீர்ப்பு



வட்டி பற்றிய நடைமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி தான் பிற வங்கிகளுக்கு ஆணையிட முடியும். நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் சொல்வது முறையல்ல என்று ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து வங்கிகள் உச்ச நீதிமன்றத்தை நாடியது. 

credit card 30%



இந்த வழக்கு நேற்று முன்தினம்(22.12.2024) நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரெடிட் கார்டு கடன்களுக்கு அதிகபட்ச வட்டியாக 30 சதவீதத்துக்கு மேல் இருக்க கூடாது என்ற தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.


இதனால் இனி கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டவில்லையானால் அதிகளவில் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *