கிங்டம் திரை விமர்சனம்

ஜெர்ஸி என்ற சூப்பர் எமோஷ்னல் படத்தை கொடுத்த கௌதம் அடுத்து என்ன செய்வார் என்று காத்திருந்த நிலையில், பல வருடமாக ஒரு கம்பேக் ஆக காத்திருந்த விஜய் தேவரகொண்டாவுடன் கைக்கோர்த்த படமே கிங்டம். இந்த படம் விஜய் தேவரகொண்டாவுக்கு கம்பேக் கொடுத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
1920-களில் ஒரு ட்ரைப் குழுவை வெள்ளையர்கள் தங்கத்திற்காக அழிக்கின்றனர். அங்கிருந்து சில பெண்கள், குழந்தைகள் மட்டும் அரசன் உத்தரவால் ஸ்ரீலங்காவில் ஒரு தீவில் தஞ்சம் அடைகின்றனர். அதன்பிறகு சொந்த நாட்டிற்கு வர முடியாமல் தத்தளிக்கும் மக்களை மீண்டும் அரசன் காப்பாற்றுவான் என காத்திருக்கின்றனர்.
1991 விஜய் தேவரகொண்டா கான்ஸிடபுளாக வேலை பார்க்கிறார், அதே நேரத்தில் நேரத்தில் சிறு வயதில் அம்மாவை குடித்து விட்டு வந்து அடிக்கும் அப்பாவை விஜய் தேவரகொண்டா அண்ணன் கொன்றுவிட்டு தப்பிக்கின்றார்.
தன் அண்ணனை சிறு வயதிலிருந்து தேடி வரும் விஜய் தேவரகொண்டாவிற்கு, தன் அண்ணனையே பிடிக்கும் ஒரு அண்டர்கவர் ஆப்ரேஷன் கிடைக்கிறது. ஏனெனில் விஜய் தேவரகொண்டா அண்ணனும் ஸ்ரீலங்காவில் ஒரு பெரும் மாஃபியா தலைவனாக உள்ளார்.
இதனால் ஒரு கைதி போல் ஸ்ரீலங்கா சென்று விஜய் தேவரகொண்டா, தன் அண்ணனுக்கு ஏதும் ஆகாமல் அங்கிருந்து காப்பாற்றினாரா, அல்லது அந்த தீவு மக்களுக்கு அரசன் ஆனாரா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் தேவரகொண்டா சூரி கதாபாத்திரத்தை வாழ்ந்துள்ளார், தன் அண்ணனை தேடி ஒரு ஸ்பை ஆக அவர் கூட்டத்திற்குள் சென்று, அவர் அண்ணனுக்கு தெரியாமல் விஷயத்தை தெரிந்துக்கொள்ள போராடும் தருணம், அதே நேரத்தில் ஸ்பை என்று தெரியவும் கூடாது அதற்காக அவர் தாங்கும் வலிகள் என மனுஷன் வாழ்ந்துள்ளார், கண்டிப்பாக கெரியர் பெஸ்ட் பெர்ப்பாமன்ஸ் இந்த கிங்டம் என்று சொல்லலாம்.
சத்யதேவ் ஆக வரும் விஜய் தேவரகொண்டா அண்ணம், அவரும் தன் பங்கிற்கு சிறப்பாக நடித்துள்ளார், அதிலும் தன் தம்பி ஒருவருக்காக தன் ஊரையே கூட அவர் கொடுக்க நினைக்கும் பலி எல்லாம் தவிர் எமோஷ்னல் உச்சக்கட்டமாக அமைந்துள்ளது.
படத்தின் முதல் பாதி ஏதோ ஸ்பை கதை என்பதால் விறுவிறு என திரைக்கதை அமைக்காமல், மிக மெதுவாகவே திரைக்கதை நகர்கிறது, அதை தொடர்ந்து இடைவேளையில் தங்கம் கடத்தும் சீன் மெல்ல பற்ற வைத்து கடைசியில் வெடிக்கும் பாம் போல் இடைவேளை காட்சி அமைந்துள்ளது.
இரண்டாம் பாதி அத்தகைய விறுவிறுப்பிற்கு பதில் சொன்னதா என்றால், மீண்டும் எமோஷ்னல் ரூட்டை தான் இயக்குனர் கௌதம் தேர்ந்தெடுத்துள்ளார். அது ஒரு சில இடங்களில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. மீண்டும் அண்ணன்-தம்பி பாச போராட்டம், போலிஸின் நயவஞ்சக புத்தி அது இவர்களை எங்கு கொண்டு செல்கிறது என்பதை எமோஷ்னலாகவே கொண்டு சென்றுள்ளனர்.
அதிலும் தான் தம்பி ஸ்பை என தெரிய கூடாது என்றும் மீதமிருக்கும் தன் மக்களுக்காக சத்யதேவ் போராடும் இடம் மிகுந்த வலியுடன் பதிவு செய்துள்ளனர்.
ஹீரோயின் எல்லாம் எதற்கு படத்தில் எதோ வைக்க வேண்டும் என்பத்ற்காக வைத்தது போல் வந்து செல்கிறார் பாக்யஸ்ரீ, வில்லன் கதாபாத்திரம் முருகன் கவனம் ஈர்க்கிறார்.
படத்தில் எத்தனையோ காட்சியில் எட்ஜ் ஆப் தி சீட் கொண்டு வரும் காட்சிகள் இருந்தும், மிக பொறுமையாகவே கதையை நகர்த்தி செல்வது ஒரு கட்டத்திற்கு மேல் கமர்சியல் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் நிகழ்வு தான்.
அதே நேரத்தில் அனிருத் அப்படி தொய்வாகும் காட்சி எல்லாம் நான் இருக்கிறேன் என இறங்கி தன் பங்கிற்கு பின்னணி இசையால் படத்தை தாங்கி பிடித்துள்ளார்.
டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது, படத்தின் ஒளிப்பதிவு இலங்கையை படம்பிடித்த விதம் அத்தனை யதார்த்தம், அதற்கு ஏற்றது போல் அனிருத் பின்னணி இசை அமைந்தது படத்தை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது.
க்ளாப்ஸ்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்தக்கட்டம் அவருக்கு.
மற்ற நடிகர்கள் பங்களிப்பு.
படத்தின் முதல் பாதி.
கிளைமேக்ஸ்
ஒளிப்பதிவு, இசை என டெக்னிக்கல் விஷயங்கள்.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி அடுத்து இதுதானே இதுதானே என்று நமக்கே தெரியும் காட்சிகள்.
அடர்கவர் படங்களில் நாம் ஏற்கனவே பார்த்த பல காட்சிகள் இதிலும் வந்து செல்கிறது.
மொத்தத்தில் கிங்டம் கொஞ்சம் விட்டு இருந்தாலும் ஆட்டம் கண்டு இருந்திருக்கும், விஜய் தேவரகொண்டா மற்றும் டெக்னிக்கல் விஷயங்கள் இந்த அரியணையை தாங்கி பிடிக்கிறது.