கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட பிரியங்கா மோகன்.. இணையத்தில் வைரல்

பிரியங்கா மோகன்
கேங் லீடர், டாக்டர், டான் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் கவனத்தை பெற்றவர் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் OG.
இப்படத்தில் பவன் கல்யாணுடன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக கவினுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
படங்களை தாண்டி தற்போது வெப் தொடரில் களமிறங்கியுள்ள பிரியங்கா மோகன், ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள மேட் இன் கொரியா வெப் தொடரில் நடித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் போட்டோ
பிஸியான நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவு செய்வார். இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், கர்ப்பமாக இருக்கும் சில போட்டோக்களை பிரியங்கா வெளியிட்டதும் ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். ஆனால், அந்த புகைப்படங்கள் OG திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை ஆகும். இதோ அந்த போட்டோஸ்: