ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி… எப்படி செய்வது?

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி… எப்படி செய்வது?

பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் கொய்யா. இது எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய ஊட்டச்சத்துக்கள் சிறைந்த ஒரு ஆரோக்கியயமான பழமாக இது பார்க்கப்படுகின்றது.

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது.

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney Recipe In Tamil

கொய்யாவில் நார்ச்சத்து செறிந்து காணப்படுவதால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். 

நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி காணப்படுகின்றது இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகின்றது.

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney Recipe In Tamil

இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட கொய்யா பழத்தில் சட்னி செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா? 

அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு கொய்யா சட்னி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney Recipe In Tamil

கொய்யாப்பழம் – 1

காஷ்மீர் மிளகாய் – 5

வரமிளகாய் – 3 (காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்) 

சீரகம் – 1 தே.கரண்டி 

கொத்தமல்லி இலை

ஒரு கைப்பிடி அளவு

தேங்காய் – ½ மூடி

பூண்டு – 3 பல் 

சின்ன வெங்காயம் – 5

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு 

வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – ½ தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney Recipe In Tamil

எண்ணெய் – 2 தே.கரண்டி

கடுகு – சிறிதளவு 

உளுந்தம் பருப்பு – ¼ தே.கரண்டி

கடலைப்பருப்பு – ¼ தே.கரண்டி

செய்முறை

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney Recipe In Tamil

முதவில் கொய்யாப் பழத்தை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பூண்டு மற்றும் வெங்காயத்தின் தோலை நீக்கி சுத்தம் செய்து வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கொத்தமல்லி இலைகளை மண் இல்லாமல் நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney Recipe In Tamil

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பூண்டு, சின்ன வெங்காயம், மற்றும் புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் காஷ்மீர் மிளகாய், வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து கொத்தமல்லி இலை மற்றும் துருவிய தேங்காயையும்  சேர்த்து நன்றாக அரைத்து. அதனுடன் வதக்கி ஆற வைத்த வெங்காயம், பூண்டு மற்றும் புளி சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். 

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி... எப்படி செய்வது? | Guava Chutney Recipe In Tamil

இறுதியில் சிறிது வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து  எண்ணெய் சேர்த்து சூடானதும்,  கடுகு சேர்த்து பொரிய விடவும்.

அதனையடுத்து கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, சட்னி உடன் சேர்த்து நன்றாக கலந்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கொய்யாப்பழ சட்னி தயார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *