எம்புரான் பட டிரைலரை முதல் ஆளாக பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்..

எம்புரான் பட டிரைலரை முதல் ஆளாக பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்..

லூசிஃபர் 2

நடிகராக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்த பிரித்விராஜ் கடந்த 2019ல் வெளிவந்த லூசிஃபர் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார்.

L2: எம்புரான் பட டிரைலரை முதல் ஆளாக பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியில் பிரித்விராஜ் | Rajinikanth Watched L2 Empuraan Movie Trailer

மேலும் மஞ்சு வாரியர், விவேக் ஓப்ராய், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இப்படம் வெற்றியடைந்தது.

L2: எம்புரான் பட டிரைலரை முதல் ஆளாக பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியில் பிரித்விராஜ் | Rajinikanth Watched L2 Empuraan Movie Trailer

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு லூசிஃபர் 2: எம்புரான் என தலைப்பு வைத்துள்ளனர். வருகிற மார்ச் 27ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்கான டிரைலர் தற்போது தயாராகியுள்ளது.

பாராட்டிய ரஜினிகாந்த்

இந்த டிரைலரை படக்குழுவை தவிர்த்து முதல் ஆளாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். ஆம், சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார் பிரித்விராஜ். அப்போது தனது எம்புரான் படத்தின் டிரைலரை அவருக்கு போட்டு காட்டியுள்ளார்.

L2: எம்புரான் பட டிரைலரை முதல் ஆளாக பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்.. மகிழ்ச்சியில் பிரித்விராஜ் | Rajinikanth Watched L2 Empuraan Movie Trailer

படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சந்திப்பின் போது ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரித்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *