எனக்கு நயன்தாரா வேணும்…சிஎம் கொடுப்பாரா?.. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு..

அரசியல்
இன்னும் 2 மாதத்திற்கு தமிழகம் முழுவதும் மிகவும் பரபரப்பாக இருக்கும், காரணம் தேர்தல் தான்.
அடுத்த மாதம் தேர்தல் வரப்போகிறது, இதனால் அரசியல் கட்சிகள் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர். எல்லா அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்த என்ன செய்ய வேண்டும் என பிளான்கள் போட்டுவிட்டனர்.
இதற்கு இடையில் தேர்தல் பறக்கும் படை சோதனைகள் செய்த வண்ணம் உள்ளனர்.
சி.வி.சண்முகம்
அண்மையில் அதிமுக சார்பில் விழுப்புரத்தில் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்வதாக கூறி நயன்தாராவை இடையில் இழுத்துள்ளார்.
அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார், இவர் ஒருபடி மேலே போய் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுவோம் என்கிறார்.
ஆமாம் எனக்கு நயன்தாரா வேணும் னா கனவை நிறைவேற்றுவாரா, நயன்தாராவை கல்யாணம் செய்து வை என்று கேட்டாலே கனவை நிறைவேற்றுவாரா என சர்ச்சையாக பேசியுள்ளார்.






