எதிர்பார்த்ததை விட விரைவில்… உலகப் போர் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் மீண்டும் தீர்க்கதரிசனம்

எதிர்பார்த்ததை விட விரைவில்… உலகப் போர் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் மீண்டும் தீர்க்கதரிசனம்


வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவரான Athos Salomé, மூன்றாம் உலகப் போர் தொடர்பில் தமது தீர்க்கதரிசனம் எதிர்பார்த்ததை விட விரைவில் நிறைவேற இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

மூன்றாம் உலகப் போர்

ஆனால் ஒருவேளை நாம் எதிர்பார்க்கும் விதத்தில் மூன்றாம் உலகப் போர் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரேசில் நாட்டவரான Athos Salomé உலகம் முழுவதும் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை குறித்து சில கணிப்புகளை பதிவு செய்துள்ளார்.

எதிர்பார்த்ததை விட விரைவில்... உலகப் போர் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் மீண்டும் தீர்க்கதரிசனம் | Living Nostradamus Ww3 Prophecy Imminent

2025ல் உலகப் போர் வெடிக்கலாம் என அவர் முன்பு கூறியிருந்தார். ஆனால் தற்போது, ​​உலகம் போரை நெருங்கி வருவதாகத் தோன்றுகிறது என்றும், மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவில் மூண்டுள்ள போர்கள், மேற்கத்திய நாடுகளின் ஈடுபாடு அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிடும் போர் என்பது தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்பட இருப்பவை என எச்சரித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு இறுதியில் போருக்கான பல குறியீடுகள் தென்படக் கூடும் என 2023ல் வாழும் நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டிருந்தார்.

இது மனிதர்களால் முன்னெடுக்கப்படும் போர் மட்டுமல்ல, இயந்திரங்களின் போர், இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்றும் அவர் விளக்கமளித்திருந்தார். ரஷ்யா உக்ரைன் மீது உக்கிரமானத் தாக்குதலை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதுடன்,

எதிர்பார்த்ததை விட விரைவில்... உலகப் போர் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் மீண்டும் தீர்க்கதரிசனம் | Living Nostradamus Ww3 Prophecy Imminent

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வரும் முன்னர், உக்ரைனில் தங்களால் இயன்ற நிபப்பரப்பை கைப்பற்றவும் ரஷ்யா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அத்துடன் உக்ரைன் நகரமான டின்ப்ரோ மீது ஆபத்தான ஓர்ஷ்னிக் சூப்பர்சோனிக் ஏவுகணையை ஏவி தங்கள் பலத்தை உறுதி செய்துள்ளது.

ஸ்தம்பித்துப் போகலாம்

அதே வேளை, எந்த நடவடிக்கை ஊடாகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஆனால் வாழும் நாஸ்ட்ராடாமஸின் பார்வை சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதிந்துள்ளது. தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இரு நாடுகளும் மறைமுகப் போருக்கு தயாராகலாம் என்றும்,

எதிர்பார்த்ததை விட விரைவில்... உலகப் போர் குறித்து வாழும் நாஸ்ட்ராடாமஸ் மீண்டும் தீர்க்கதரிசனம் | Living Nostradamus Ww3 Prophecy Imminent

ஒரு தொழில்நுட்பத் தாக்குதலால் ஒரு நாட்டின் மொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் அல்லது உள்கட்டமைப்புகளும் ஸ்தம்பித்துப் போகலாம் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரித்துள்ளார்.

தென் சீன கடல் விவகாரம் பூதாகரமாக வெடித்து பாரிய சைபர் தாக்குதல்களுக்கு காரணமாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் உச்சம் கொண்ட ஆயுதமானது பொதுமக்கள் மற்றும் இராணுவ அமைப்புகளை சீர்குலைப்பதுடன்,

கணிக்க முடியாத வகையில் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்டுள்ள புதிய இன்னும் பகிரங்கப்படுத்தப்படாத அந்த ஆயுதம் குறித்து உண்மையில் உலக நாடுகள் அச்சப்பட வேண்டும் என்றும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *