உலகளவில் ‘தேரே இஷ்க் மே’ படம் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தேரே இஷ்க் மே
தனுஷின் நடிப்பில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் திரைக்கு வந்த படம் தேரே இஷ்க் மே.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை க்ரீத்தி சனோன் நடித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில கலவையான விமர்சனங்களையும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ வசூல்
தேரே இஷ்க் மே படத்தின் வசூல் விவரம் குறித்து படக்குழுவினர் அவ்வப்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 161.36 கோடி வசூல் செய்துள்ளது என அறிவித்திருக்கிறார்கள்.






