இராமாயணா பட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் யஷ் அணிந்துவந்த வாட்ச் விலை இத்தனை லட்சமா?… யப்பா

நடிகர் யஷ்
அம்மன் படங்கள், இராமாயணம், மகாபாரதம் போன்ற படங்களுக்கு எப்போதுமே மக்கள் தனி வரவேற்பு கொடுப்பார்கள்.
இதனாலேயே நிறைய படங்கள் சாமி சம்பந்தப்பட்ட கதைக்களத்தை வைத்து உருவாகியுள்ளது. அப்படி தற்போது ஹிந்தியில் தயாராகி வருகிறது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணா படம் தயாராகியுள்ளது.
இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் ஜுலை 24ம் தேதி டிரெய்லர் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாக டிரைலர் அறிமுக விழா அண்மையில் டெல்லியில் நடைபெற்றது.
யஷ் பேச்சு
இந்நிகழ்ச்சியில் KGF புகழ் நடிகர் யஷ் பேசுகையில், இந்தப் படத்தின் ஒரு பாகமாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இதற்கான எல்லா பாராட்டுகளும் நமித் மல்ஹோத்ராவுக்கு தான் போக வேண்டும். இப்படி ஒரு படம் நடக்கவும், அதில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும் அவரே காரணம், அதற்கு நன்றி. அவர் இல்லை என்றால் இது நடந்திருக்காது.
இது இந்தியாவின் கனவு என பேசியிருந்தார். நிகழ்ச்சியில் யஷ் பேசியதை தாண்டி அவர் அணிந்திருந்த வாட்ச் மீது பலரின் கவனம் சென்றுள்ளது. தற்போது அவர் அணிந்த வாட்ச் மாடல் மற்றும் விலை குறித்த தகவல் காண்போம்.
Rolex Daytona என்ற பிராண்ட் வாட்ச்சை அணிந்துள்ளார், அதன் விலை ரூ. 48.78 லட்சம் என கூறப்படுகிறது.






