இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம்

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம்

WWE புகழ் டேவ் படிஸ்ட்டா, மில்லா ஜோவோவிச் நடிப்பில் வெளியாகியிருக்கும் “இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்” படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம் | In The Lost Lands Movie Review

கதைக்களம்



இது ஒரு தேவதையின் கதை அல்ல, இதன் முடிவு நிச்சயம் நீங்கள் நினைப்பதுபோல் இருக்காது என்று படிஸ்ட்டா சொல்வதுடன் படம் தொடங்குகிறது.

பெரும் போர்கள் முடிந்து மோசமான உலகமாக மாறியிருக்கிறது.



அங்கே கிரே அலிஸ் என்ற பெண்ணை கொல்ல தூக்கிலிடுகிறது ஒரு கும்பல்.

அவள் பார்வை மூலம் மந்திரம் செய்து அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்.

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம் | In The Lost Lands Movie Review

பின் போய்ஸ் என்ற ஹன்டரை சந்திக்கும் கிரே, அரிய பொருளை கண்டுபிடிக்க செல்லும் தனக்கு உதவுமாறு கேட்கிறார்.

அதற்கு போய்ஸும் சம்மதிக்க இருவரும் ஒன்றாக புறப்படுகின்றனர்.

வழியில் வரும் பல தடங்கல்களை அவர்கள் கடக்கும்போது, கிரேவை கொல்ல துரத்தும் கும்பலையும் சமாளிக்க வேண்டியதாகிறது.

இறுதியில் கிரே நினைத்ததை முடித்தாரா? போய்ஸின் நிலை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
 

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம் | In The Lost Lands Movie Review

படம் பற்றிய அலசல்



ரெசிடெண்ட் ஈவில், ஏலியன் விஸ் பிரிடேட்டர், டெத் ரேஸ் ஆகிய படங்களை இயக்கிய பால் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஆந்தோலோஜி நாவலின் கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.



கிரே அலிஸாக ரெசிடெண்ட் ஈவில் புகழ் மில்லா ஜோவோவிச் நடித்திருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கும் அவர் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்.

ஆனால், அதற்கு ஏற்றாற்போல் வலுவான திரைக்கதையோ, காட்சியமைப்புகளோ இல்லை.

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம் | In The Lost Lands Movie Review



இளவரசி கேட்கும் வரத்தை கொடுக்கும் மில்லா, மேற்கொள்ளும் பயணத்தில் வரும் தடைகள் எல்லாம், நாம் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்திலேயே பார்த்துவிட்டோம்.

அதில் இருந்த சுவரஸ்யத்தில் பாதியளவு கூட இதில் இல்லை.

பாடிஸ்ட்டா துப்பாக்கியால் சுடுவதைத் தவிர எந்த சண்டையும் போடவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.

சீரில்லாத திரைக்கதை எங்கெங்கோ சென்று நம்மை சோதிக்கிறது. சண்டைக்காட்சிகள், மாயாஜாலம் எதும் நம்மை கவரவில்லை.

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம் | In The Lost Lands Movie Review



மாறாக, நாங்க இதெல்லாம் 15 வருஷம் முன்னாடியே காலத்திலேயே பார்த்துட்டோம் பாஸ் என்றுதான் கூற தோன்றுகிறது. அதேபோல் பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ்.

படத்தின் மேக்கிங் மேட் மேக்ஸ் படத்தை காப்பியடித்து போல் உள்ளது.

பின்னணி இசை பரவாயில்லை ரகம்.

இயக்குநர் பால் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் பல இடங்களில் தடுமாறியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.  

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம் | In The Lost Lands Movie Review

க்ளாப்ஸ்



மில்லா ஜோவோவிச் நடிப்பு



டேவ் படிஸ்ட்டாவின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்


பல்ப்ஸ்



சொதப்பலான திரைக்கதை



சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள்



லாஜிக் ஓட்டைகள்



மொத்தத்தில் பார்வையாளர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறது இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ். 

இன் தி லாஸ்ட் லேண்ட்ஸ்: திரை விமர்சனம் | In The Lost Lands Movie Review

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *