இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் என்று தெரியுமா! அட இவரா

வைரலாகும் புகைப்படம்
திரையுலகில் உள்ள நடிகர்கள், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி இந்திய அளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நட்சத்திரங்களில் இவரும் ஒருவர். 1961ல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
நாகர்ஜுனா
65 வயதாகியிருந்தாலும் இன்று பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாதான். தனது தாய் உடன் அவர் சிறு வயதில் நடிகர் நாகர்ஜுனா எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நாகர்ஜுனா நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.