இந்தி தெரியாது, குபேரா பட விழாவில் தமிழில் பேசிய தனுஷ்..

தனுஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்கில் வெளிவர உள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தி தெரியாது
இந்நிலையில், குபேரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழில் பேசிய நடிகர் தனுஷ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தொப்பாளினி தனுஷை ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார். அப்போது, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேச தொடங்கி விட்டார்.
மேலும், அவருக்கு இந்தி தெரியாது எனவும், அதனால் ஆங்கிலத்தில் பேசுகிறேன், அதுவும் கொஞ்சம் தான் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
Unstoppable energy of D 🔥
@dhanushkraja Speech at #Kuberaa3rdSingle launch ✨#Kuberaa in cinemas June 20, 2025.#PippiPippiDumDumDum #SekharKammulasKuberaa #KuberaaOn20thJune pic.twitter.com/w1IRjFMFW4— Kuberaa Movie (@KuberaaTheMovie) June 10, 2025