இந்தியில் பேச மறுத்த பாலிவுட் நடிகை கஜோல்.. கோபமாக சொன்ன விஷயம்

கஜோல்
Bekhudi என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.
இதன்பின் பல ஆண்டுகள் கழித்து, தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். கஜோல் கலைத்துறையில் செய்த செயல் மற்றும் அவரது இந்திய சினிமா பங்களிப்பை முன்னிட்டு அவருக்கு கவுரவ விருதான ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது.
கோபமான பதில்:
அப்போது அங்கு பத்திரைக்கையாளர்களை சந்தித்த கஜோல் அங்கு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியில் பதிலளித்தார்.
அப்போது ஒருவர் இந்தியில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு, கஜோல் இப்போது நான் இந்தியில் பேச வேண்டுமா? நான் பேசியது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்” என்ற கோபமாக கூறிவிட்டு கிளம்பினார்.