அரசு வேலை வாங்கிய பின்னும் திட்டு வாங்கும் செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் இன்று

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்று தான் செந்திலுக்கு அரசு வேலை கிடைத்ததற்காக மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது.
ஆனால் இன்றைய எபிசோடில் அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
திட்டி தீர்த்த பாண்டியன்
செந்தில் 10 லட்சம் ரூபாய் கொடுத்து தான் வேலை வாங்கி இருக்கிறார் என்கிற விஷயத்தை அவரது மாமனார் வந்து பாண்டியனிடம் சொல்லி விடுகிறார்.
அதை பற்றி கேட்டு பாண்டியன் செந்திலை திட்டி தீர்த்துவிடுகிறார். 10 லட்சம் பணம் எப்படி வந்தது என கேட்க, அப்போது செந்தில் உண்மையை சொல்ல போகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து தான் தான் லோன் போட்டு கொடுத்ததாக சொல்கிறார்.
இதனால் பாண்டியன் மேலும் கோபமாகி, தன்னிடம் எதுவும் சொல்லாதது பற்றி கேட்டு கோபமா பேசுகிறார். அரசு வேலை கிடைத்தும் இப்படி திட்டு வாங்கி கொண்டிருக்கிறார் செந்தில். நீ வேலையில் மட்டும் இல்லை என்றால் உன்னை அடித்து இருப்பேன் என அப்பா பாண்டியன் சொன்னது தான் ஹைலைட்.