அய்யனார் துணை சீரியலில் அடுத்து லவ் ட்ராக் தானா? ரசிகர்களின் கமெண்ட் பாருங்க..

அய்யனார் துணை சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிலா ஒரு பெரிய பிரச்சனையில் இருக்கும்போது சோழன் தான் உதவுகிறார்.
அதனால் நிலா அதில் இருந்து மீண்டு வந்து சோழனை கட்டிப்பிடிக்கிறார்.
காதல் தொடக்கம்?
நிலா தனது லேப்டாப்பை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு வர, ப்ரெசென்ட்டேஷன் செய்ய முடியாமல் கம்பெனியில் தவிக்கிறார். அப்போது அது பற்றி சோழனுக்கு போன் செய்து சொல்கிறார்.
நிலா திட்டு வாங்கி கொண்டிருக்கும் நேரத்தில் சோழன் சரியாக லேப்டாப் கொண்டு வந்து கொடுக்கிறார். அதன் மூலமாக நிலா presentation செய்து முடிக்கிறார். அதன் பின் நேராக வெளியில் வந்து சோழனை கட்டிப்பிடிக்கிறார்.
இருவருக்கும் ரொமான்ஸ் ட்ராக் தொடங்கிவிட்டதா? என ரசிகர்கள் கமெண்ட்டில் கேட்டு வருகிறார்கள்.






