அமோக வரவேற்பை பெற்ற தலைவன் தலைவி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

தலைவன் தலைவி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளிவந்த திரைப்படம் தலைவன் தலைவி.
கடந்த மாதம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே வசூல் பட்டைய கிளப்பியது.
வசூல்
இந்நிலையில், 16 நாட்களை கடந்திருக்கும் தலைவன் தலைவி படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 89.5 கோடி வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதையும், ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.