அப்பாவின் மரணம் பெரிய பயத்தை கொடுத்தது.. நடிகர் அதர்வா உருக்கம்

அப்பாவின் மரணம் பெரிய பயத்தை கொடுத்தது.. நடிகர் அதர்வா உருக்கம்

அதர்வா

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார்.

பாணா காத்தாடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அப்படத்தை தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில், பரதேசி, தள்ளிப் போகாதே,100, பூமராங், இமைக்கா நொடிகள் போன்ற பல படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றார்.

அப்பாவின் மரணம் பெரிய பயத்தை கொடுத்தது.. நடிகர் அதர்வா உருக்கம் | Atharvaa Emotional Talk About His Father

உருக்கம் 

இந்நிலையில், இவரின் தந்தை மறைவுக்கு பின் வாழ்க்கையை நினைத்து பயந்தது உண்டா? என்று கேள்வி வர அதற்கு அதர்வா அளித்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “இது நிச்சயமில்லாத வாழ்க்கை. அவரின் மரணம் பெரிய பயத்தை கொடுத்தது. என்னை பொருத்தவரை இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யக்கூடாது. அதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.     

அப்பாவின் மரணம் பெரிய பயத்தை கொடுத்தது.. நடிகர் அதர்வா உருக்கம் | Atharvaa Emotional Talk About His Father  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *