அந்த நடிகை ஆண் போல இருக்கிறார்.. உருவகேலி செய்த மிருனாள் தாகூருக்கு நடிகை பதிலடி

நடிகர் தனுஷை காதலிப்பதாக சமீபத்தில் கிசுகிசுவில் சிக்கியவர் நடிகை மிருனாள் தாகூர். இருப்பினும் தனுஷ் நண்பர் மட்டும் தான் என அவர் விளக்கம் கொடுத்துவிட்டார்.
ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் அவர் தற்போது புதிய சர்ச்சை ஒன்று சிக்கி இருக்கிறார்
சில வருடங்களுக்கு முன்பு மிருனாள் தாகூர் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை பிபாஷா பாசுவை உருவ கேலி செய்யும் வகையில் பேசி இருக்கிறார்.
ஆண் போல இருக்கிறார்
நடிகை பிபாஷா பாசு ஆண் போல muscles உடன் இருக்கிறார், நான் அவரை விட better என மிருனாள் தாகூர் பேசிய அந்த வீடியோ தற்போது வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை பிபாஷா பாசு இன்ஸ்டாகிராமில் மிருனாள் தாகூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
“வலிமையான பெண்கள் மற்றவர்களையும் தூக்கி விடுவார்கள். அழகிய பெண்களே muscle வைத்து கொள்ளுங்கள். பெண்கள் உடல்ரீதியாக வலிமையாக இருக்க கூடாது என்ற பழைய கால எண்ணத்தை மாற்றிடுங்கள்” என மிருனாளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.