அது நான் இல்லை.. நடிகை ஸ்ருதி ஹாசன் ரசிகர்களுக்கு எச்சரிக்கை

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக எந்த படமும் நடிக்காமல் இருந்தார். தற்போது ரஜினியின் கூலி படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருப்பதன் மூலம் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
இந்த படம் அவரது கெரியருக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார் ஸ்ருதி.
ட்விட்டர் கணக்கு ஹேக்
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டனர் என தெரிவித்து இருக்கிறார்.
“அதில் போஸ்ட் போடுவது நான் அல்ல. அதனால் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்” எனவும் ரசிகர்களை எச்சரித்து இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.