அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தக் லைப் படம் அதிகம் விமர்சனங்க தற்போது சந்தித்து வருகிறது.
கடும் ட்ரோல்கள் காரணமாக வசூலும் எதிர்பார்த்த அளவு படத்திற்கு வரவில்லை. இந்நிலையில் ஹிந்தி நடிகர் அமீர் கான் மணிரத்னம் பற்றி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.
இணைந்து பணியாற்றுவேன்
“நானும் மணிரத்னமும் பல முறை சந்தித்து இருக்கிறோம். ஒரு படத்திற்காக கூட்டணி சேர இருந்தோம், ஆனால் சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆனது.”
“நான் அவரது படங்களில் மிகப்பெரிய ரசிகன். நிச்சயம் அவருடன் ஒருநாள் இணைந்து பணியாற்றுவேன் என நம்பிக்கை இருக்கிறது” என அமீர் கான் கூறி இருக்கிறார்.