அடிக்கடி போன் பேசிய மனைவி..உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர் – டிராவல் பேக்கில் எடுத்து சென்ற கொடூரம்!

அடிக்கடி போன் பேசிய மனைவி..உடலை 10 துண்டுகளாக வெட்டிய கணவர் – டிராவல் பேக்கில் எடுத்து சென்ற கொடூரம்!

  நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை 10 துண்டுகளாகக் கணவர் வெட்டி கொலைசெய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து-சந்தியா
தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவ்வப்போது கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

kumari brutal murder

இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளும் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர். மதுவுக்கு அடிமையான மாரிமுத்து சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து வீட்டிலிருந்த வெட்டுக் கத்தியை எடுத்து சந்தியாவின் தலை,கை, கால்கள், உடல் பாகங்களைத் துண்டு, துண்டுகளாக வெட்டி 3 டிராவல் பேக்குகளில் உடல் பாகங்களை வைத்துள்ளார்.அதன் பிறகு நேற்று இரவு 9.30 மணியளவில் டிராவல் பேக்குகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

10 துண்டு

அப்போது அந்த பகுதியிலிருந்த சில நாய்கள் மாரிமுத்துவை பார்த்துக் குலைத்துக் கொண்டே இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

kumari brutal murder

முதற்கட்ட விசாரணையில் நான் கூலி வேலைக்குச் செல்வதோடு, இறைச்சி வெட்டும் வேலைக்குச் சென்றது தெரியவந்தது. என் மனைவி அடிக்கடி போனில் பேசுவார். எனக்கு இது பிடிக்கவில்லை.இதனால் ஆத்திரத்தில் வெட்டினேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *