அஜித் படத்தை இயக்க இன்னும் வளர வேண்டும்.. ஓப்பனாக சொன்ன பிரபல இயக்குநர்

அஜித் படத்தை இயக்க இன்னும் வளர வேண்டும்.. ஓப்பனாக சொன்ன பிரபல இயக்குநர்

அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் அஜித் குமார். இவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் போட்டி போடும் நிலையில், இயக்குநர் ஒருவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

‘எட்டு தோட்டாக்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ கணேஷ். பின்னர் அதர்வா நடிப்பில் ‘குருதியாட்டம்’ என்ற படத்தை இயக்கினார்.

தற்போது ‘3 பிஎச்கே’ படத்தை இயக்கி உள்ளார். சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகிபாபு, மீதா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வருகிறது.

அஜித் படத்தை இயக்க இன்னும் வளர வேண்டும்.. ஓப்பனாக சொன்ன பிரபல இயக்குநர் | Director About Directing Ajith Kumar

இன்னும் வளர வேண்டும்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் இந்த படத்திற்கு பின் அஜித் குமாரை வைத்து படம் இயக்க போவது உண்மையா? என்று கேள்வி எழுந்தது.

அதற்கு, அஜித் குமார் ஒரு மிகப்பெரிய நடிகர். அவர் நடிக்கும் படத்தை இயக்க வேண்டுமென்றால் நானும் அந்த அளவிற்கு வளர வேண்டும். இன்னும் தரமான பல படங்களை இயக்கி என்னுடைய தகுதியை வளர்த்துக் கொண்டு அதன் பின், அஜித்தை வைத்து படம் இயக்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.     

அஜித் படத்தை இயக்க இன்னும் வளர வேண்டும்.. ஓப்பனாக சொன்ன பிரபல இயக்குநர் | Director About Directing Ajith Kumar 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *