அஜித்குமாரின் புதிய Mercedes-AMG GT3 ரேஸிங் கார்… விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித்
சினிமாவில் டாப் இடத்திற்கு வந்துவிட்டால் அடுத்தடுத்து படங்கள் நடித்து ரிலீஸ் செய்ய வேண்டும், பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் எனதான் பிரபலங்கள் பலர் யோசிப்பார்கள்.
ஆனால் ஆஜித் அப்படி இல்லை, என் வழி தனி வழி என மாஸ் காட்டி வருகிறார். துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆக தாமதமானது, இந்த வருட ஆரம்பத்தில் எப்படியோ படம் வெளியானது.
படம் சரியான வரவேற்பு பெறவில்லை. பின் 2 மாதத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக இப்படம் செம மாஸ் வசூல் வேட்டை நடத்தியது.
கார் விலை
2 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது, அடுத்த படம் கொஞ்சம் யோசிப்போம் என நடிப்பிற்கு கொஞ்சம் லீவ் விட்டுவிட்டு இப்போது கார் ரேஸ் களத்தில் கெத்து காட்டி வருகிறார்.
தனது மிகவும் பிடித்த கார் ரேஸில் கலந்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை தன்வசமாக்கி வருகிறார் அஜித்.
அண்மையில் Mercedes-AMG GT3 ரேஸிங் காரை அஜித் வாங்கி இருந்தார்.
அந்த காருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது இந்த காரின் விலை கேட்டுதான் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இந்த Mercedes-AMG GT3 ரேஸ் காரின் விலை சுமார் ரூ. 10க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.