UK-வில் பராசக்தி படம் எவ்வளவு டிக்கெட் விற்பனையாகியுள்ளது தெரியுமா? இதோ பாருங்க

பராசக்தி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா இணைந்து நடித்துள்ள படம் பராசக்தி.
இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக ஸ்ரீலீலா அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் ராணா டகுபதி, பேசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
UK முன்பதிவு
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பராசக்தி படம் வருகிற ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், UK-வில் முன்பதிவில் பராசக்தி படம் 4000+ டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது என விநியோகஸ்தர் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதோ பாருங்க..






