The Raja saab திரை விமர்சனம்

The Raja saab திரை விமர்சனம்


தி ராஜா சாப்

இந்திய சினிமாவில் ஹாரர் பேண்டசி படம் என்றாலே மினிமம் கேரண்டி தான். அப்படி ஒரு ஜானரில் இந்திய சினிமாவின் உச்ச நடிகர் பிரபாஸ் நடிப்பில் ஹாரர் பேண்டசி ஜானரில் வந்த இந்த ராஜாசாப் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம். 

The Raja saab திரை விமர்சனம் | The Raja Saab Movie Review

கதைக்களம்



பிரபாஸ் யாரும் இல்லாத அனாதையாக இருந்தாலும் ஒரு பாட்டியில் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். அந்த பாட்டி தொலைந்து போன கணவர் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்.


அவரோ ஒரு மறதி பேஷண்ட், ஆனாலும், தன் கணவர் குறித்து எதையும் மறக்காமல் இருக்கிறார். கண்டிப்பாக தன் கணவரை பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

இதனால் தன்னை வளர்த்த பாட்டிக்காக அவரை தேடி பிரபாஸ் கிளம்ப, சென்ற இடத்தில் நிதி அகர்வால், மாளவிகாவுடன் காதல், கலாட்டா என இருக்கிறார்.


அதே நேரத்தில் தாத்தாவான சஞ்சய் தத் ஒரு மாந்திரிகவாதி, பணத்தை திருடுபவர் என்றில்லாம் தெரியவர, மறு பக்கம் சமுத்திரகனியும் சஞ்சய் தத் தேடி வர, பிறகு என்ன ஆனது சஞ்சய் தத் யார், பிரபாஸ் அவரை கண்டுப்பிடித்தாரா?, சமுத்திரகனி யார், என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.

The Raja saab திரை விமர்சனம் | The Raja Saab Movie Review

படத்தை பற்றிய அலசல்



பிரபாஸ் தனி ஆளாக முழுப்படத்தையும் தாங்கி பிடிக்கிறார்.

எப்போதும் முரட்டு தனமாகவே பிரபாஸை பார்த்த நமக்கு, நீண்ட வருடம் கழித்து செம ஜாலியாக ஆட்டம் பாட்டம் என செம கலக்கு கலக்கியுள்ளார். அதிலும் தன் தாத்தா சஞ்சய் தத்-டன் சவால் விட்டு, பிறகு அவர் ஓடும் காட்சி கிளைமேக்ஸில் ஓல்ட் கெட்டப் என கலக்கியுள்ளார்.


இதை தாண்டி ஹீரோயின்ஸ் என மாளவிகா, நிதி, ரிதி என 3 பேர், இந்த 3 பேருமே க்ளாமர் தவிற எந்த பெரிய கதாபாத்திரமும் இல்லை அவர்களுக்கு, மாளவிகாவிற்கு சிறிய பைட், நிறைய க்ளாமர் என அவர் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

The Raja saab திரை விமர்சனம் | The Raja Saab Movie Review


படம் ஆரம்பித்து சஞ்சய் தத் வரும் வரை பெரும் சோதனையாகவே செல்கிறது. எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் கதை ஒரு இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பது பொறுமையை சோதிக்க இடைவேளை பகுதி நிமிர்ந்து உட்கார வைக்கின்றனர்.


இடைவேளை முடிந்து அதை தொடர்ந்து செம சர்வெடியாக படம் அதன் பிறகு மீண்டும் சோதனை தொடங்குகிறது, அட போங்கையா என்ற கட்டத்தில் கிளைமேக்ஸ் காட்சி பிரமாண்டம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.


படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, செம கலர்புல், தமன் இசை ஹாரிபாட்டர் BGM நிறைய இடங்களில் வந்தாலும், படத்திற்கு பலமே. சிஜி ஒர்க் உண்மையாவே பட்ஜெட்டை என்ன செய்தார்கள் என்றே கேட்க வைக்கிறது.

The Raja saab திரை விமர்சனம் | The Raja Saab Movie Review



க்ளாப்ஸ்



இடைவேளை அதை தொடர்ந்து வரும் சில விஷயங்கள்.

கிளைமேக்ஸ் தமன் இசை.


பல்ப்ஸ்



பார்த்து பழகிபோன கதை.

பல இடங்களில் சோதிக்கும் திரைக்கதை.

சிஜி ஒர்க்ஸ்


மொத்தத்தில் ராஜாசாப் பல இடங்களில் சோதித்து, சில இடங்களில் கைத்தட்ட வைக்கிறார்.


2/5 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *