One Last Time, என் நெஞ்சில் குடியிருக்கும்… ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு

One Last Time, என் நெஞ்சில் குடியிருக்கும்… ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு


ஜனநாயகன்

தமிழ் சினிமா அடுத்த வருடத்தோடு ஒரு சிறந்த நடிகரை மிஸ் செய்யப்போகிறது. நடிகர் விஜய், முன்னணி நடிகராக கொண்டாடப்படும் இவர் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை.

அதற்கு பின்னால் எத்தனையோ கஷ்டம், கடின உழைப்பு, விடா முயற்சி, வெற்றி-தோல்வி என நிறைய உள்ளது.

One Last Time பட விழா மேடையில் விஜய் பேசப்போகும் விஷயத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்த தருணமும் வந்துவிட்டது.

One Last Time, என் நெஞ்சில் குடியிருக்கும்... ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு | Actor Vijay Speech In Jananayagan Audio Launch

விஜய் பேச்சு

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டத்தின் உச்சமாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த அந்த தருணமும் வந்துவிட்டது, தளபதி விஜய் அவர்களின் ஸ்பீச். என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.
ஐயா ராசா, செல்லங்களா யார்ரா நீங்கலாம், என் நெஞ்சில் குடியிருக்கும் என தொடங்கினார்.

One Last Time, என் நெஞ்சில் குடியிருக்கும்... ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சு | Actor Vijay Speech In Jananayagan Audio Launch

இலங்கைக்கு பிறகு மலேசியாவில் அதிக தமிழ் மக்கள் பார்க்கிறோம். மலேசியாவில் நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா கூட இங்கே தான் படப்பிடிப்பு செய்துள்ளார்கள். எனது காவலன், குருவி படங்களும் இங்கே எடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்த உதவிய மலேசியா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி. சின்ன மண் வீட்டை கட்ட சினிமா வந்தேன், நீங்கள் பங்களா கொடுத்துவிட்டீர்கள்.

கடந்த 30 வருடங்களாக எனது பயணத்தில் ரசிகர்கள் உடன் இருந்தார்கள், அடுத்த 30 வருடத்திற்கு நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். நன்றினு சொல்றவன் இல்ல, நன்றிகடன் தீத்துட்டு தான் போவான் இந்த விஜய்.

அனிருத்திற்கு நான் MDS என புதிய பெயர் கொடுக்கிறேன், Musical Departmental Store. அதற்குள் நுழைந்தால் நீங்கள் முடிவே இல்லா பாடல்கள், BGM கேட்கலாம்.

வினோத், சமூக அக்கறை கொண்ட இயக்குனர். இதற்கு முன்பே நாங்கள் கூட்டணி அமைக்க வேண்டும் கடைசியில் இப்போது நடந்துவிட்டது.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *